அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் நேற்று திடீர் ஆய்வு செய்தார்.செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள், நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவு, ரத்த பரிசோதனை மையம், புற நோயாளிகள் பிரிவு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்த அவர், அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள், அவர்களுடன் இருந்த உறவினர்களிடம் சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

அப்போது மருத்துவமனை முதல்வர்  முத்துக்குமரன், ஸ்கேன் சென்டரில் ஆட்கள் பற்றாக்குறை இருக்கிறது. நோயாளிகளுக்கு உதவிக்காக வருபவர்களுக்கு போதுமான இடவசதி இல்லை. அவர்களுக்கு  காத்திருப்பு கட்டிடம், கழிப்பறை, வாகன நிறுத்தம், காப்பீடு அட்டை வழங்கும் மையம் ஆகிய வசதிகளை செய்து தர வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைத்தார். இதுதொடர்பாக, கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ உறுதியளித்தார்.ஆய்வின்போது, செங்கல்பட்டு திமுக நகர செயலாளர் நரேந்திரன் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: