விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலையில் வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசும் பணி: அதிகாரிகள் ஆய்வு

திருத்தணி: மாநில நெடுஞ்சாலையில் வேகத்தடையால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் வெள்ளை வண்ணம் பூசும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் சாலை விபத்துகளை தடுக்கவும், அதிவேகமாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்தும் வகையில், 20க்கும் மேற்பட்ட இடங்களில் நெடுஞ்சாலைத்துறையினர் வேகத்தடைகள் வைத்துள்ளனர். அதாவது, பஸ் நிறுத்தங்கள் மற்றும் மக்கள் அதிகளவில் சாலையை கடக்கும் இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகள் வேகத்தடை உள்ளது என அறியும் வகையில், நெடுஞ்சாலை துறையினர் வேகத்தடை அருகே எச்சரிக்கை அறிவிப்பு பலகை மற்றும் வெள்ளை வண்ணம் பூசப்பட்டுள்ளது.

இதுதவிர, வேகத்தடை அருகே ‘ரிப்பிளக்டர்’ (ஒளிரும் விளக்குகள்) அமைக்கப்பட்டுள்ளன. கடந்த இரு நாட்களுக்கு முன் எல்.ஐ.சி. உதவி மேலாளர் ஒருவர் பீரக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் வேகத்தடை உள்ளதை கவனிக்காமல் அதிவேகமாக சென்றால் விபத்து ஏற்பட்டு பலியானார். இதையடுத்து நேற்று திருத்தணி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் பிரபாகரன் ஆகியோர் நேரில் சென்று இடத்தை பார்வையிட்டு, மீண்டும் வேகத்தடைகளுக்கு வெள்ளை வர்ணம் பூசுவதற்கு ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர். தொடர்ந்து திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது.

Related Stories: