சிறப்பு மின்சார ரயில்கள் ரத்து

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சூலூர்பேட்டை வரை செல்லும் சிறப்பு மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடபட்ட அறிக்கை:பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மதியம் 12.35 மணிக்கு சூலூர்பேட்டை - சென்னை மூர் மார்க்கெட் இடையே இயக்கப்படும் வண்டி எண் 06742 மற்றும் மூர் மார்க்கெட் - சூலூர்பேட்டை இடையே மாலை 5.20 மணிக்கு இயக்கப்படும் வண்டி எண் 06741 ஆகிய இரண்டு சிறப்பு ரயில்கள் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: