திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரியும் 1997 பேட்சை சேர்ந்த 51 போலீசார் தாங்கள் பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனையடுத்து அவர்களுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.தற்போது அவர்களுக்கு 26வது ஆண்டு தொடங்கியதை முன்னிட்டு அனைவரும் ஒன்றுகூடி கொண்டாட திட்டமிட்டனர். இதற்காக 51 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களும் தங்களது அதிகாரிகளிடம் அனுமதி பெற்று இருந்தனர்.