தேர் திருவிழாவில் கோஷ்டி மோதல்: 9 பேர் காயம்

பெரம்பூர்: சென்னை தலைமை செயலக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எஸ்விஎம் நகரில் நேற்று முன்தினம் இரவு மாதா கோயில் தேர் ஊர்வலம் நடந்தது. இதில் சிலர் போதையில் ரகளை செய்தனர். நள்ளிரவு ஒரு மணியளவில் தேர் ஊர்வலம் முடிந்தபிறகு இரு தரப்பினர் கத்தி மற்றும் கற்களை கொண்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில், ஓட்டேரி எஸ்விஎம் நகரை சேர்ந்த அசோக்குமார் (26), ராஜன் (28), அர்ஜூன் (19), வசந்த் (22), லட்சுமணன் (26) ஆகிய 5 பேருக்கு தலை, நெற்றி உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளது. இதேபோல், எதிர்தரப்பை சேர்ந்த தர்மா (எ) அப்பு (20), விக்னேஷ் (எ) அலெக்ஸ் (22), குப்பன் (46), வசந்த் (23) ஆகியோருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்து, 4 பேரும்  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தலைமை செயலக காவலர் குடியிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: