ஆஷாக்களுக்கு கிடைத்த விருதால் இந்தியாவிற்கு பெருமை: ஜி.கே.வாசன் அறிக்கை

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: உலக முழுவதும் 6 உலக சுகாதார தலைவர்கள் விருது உலக சுகாதார அமைப்பு(டபிள்யூஎச்ஓ) சார்பாக வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றாக இந்தியாவில் உள்ள “ஆஷா” ஒட்டுமொத்த பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது மிகுந்த போற்றுதலுக்குரியது, பாராட்டுக்குரியது. ஆஷா அமைப்பினர் சகிப்புத்தன்மையோடும், அர்பணிப்பு உணர்வோடும் மக்களுக்கு ஆற்றிய பணி போற்றுதலுக்குரியது.  கொரோனாவின் தாக்கத்தைப் பற்றி பாமரர் முதல் படித்தவர் வரை விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை காப்பதில் முழு பங்காற்றி தங்களின் அயராத உழைப்பின் மூலம் வென்று காட்டி இருக்கிறார்கள். இவர்களின் தன்னலமில்லா பணிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் (உலக சுகாதார அமைப்பு) டைரக்டர் ஜெனரல்,  உலகளாவிய சுகாதார தலைவர்கள் விருதை அளித்து கௌரவித்துள்ளது. இந்த விருதால் இந்தியாவிற்கே பெருமை ஆகும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: