சிவில் சப்ளை கார்ப்பரேஷன் வழக்குகளில் ஆஜராகும் வக்கீல்கள் பட்டியல்

சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகங்களின் வழக்குகளில் ஆஜராக வழக்கறிஞர்களை நியமனம் செய்து நிர்வாக இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் தொடர்பாக உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள வழக்குகளில் ஆஜராவதற்காக வழக்கறிஞர்கள் எஸ்.அறிவழகன், செந்தில்குமார், ஜெ.காணிக்கை நாதன், வி.ஆர்.தியாகராஜன், பி.செந்தில்குமார், எஸ்.சந்திரநாதன், ஹேமாவதி தீனதயாளன், கே.திருஞானம், சி.செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். இந்த வழக்கறிஞர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தொடர்பாக புதிதாக தொடரப்படும் வழக்குகளில் ஆஜராவார்கள். ஏற்கனவே உள்ள வழக்குகளில் ஆஜராக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் அரசு பிளீடர்கள் அந்த வழக்குகளில் தொடர்ந்து ஆஜராவார்கள். மாவட்ட நீதிமன்றங்களில் தொடரப்படும் வழக்குகளில் அந்தந்த நீதிமன்றங்களில் உள்ள அரசு பிளீடர்கள் ஆஜராவார்கள். இந்த அறிவிப்பை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மேலாண்மை இயக்குநர் பி.ராஜவேல் அறிவித்துள்ளார்.

Related Stories: