ஆபத்தான விளையாட்டு வேண்டாம்!: சீனாவுக்கு ஜோ பிடன் எச்சரிக்கை

டோக்கியோ: தைவான் விஷயத்தில் சீனாவின் தலையீடு ஆபத்துடன் விளையாடுவதற்கு சமமாகும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கூறி உள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரில் இன்று குவாட் மாநாடு தொடங்கியது. அதில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வந்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் சுதந்திரத்திற்கு எதிராக செயல்படும் ரஷ்யாவின்  படையெடுப்பை முறியடிக்க உக்ரைனுக்கு அமெரிக்கா பல உதவிகளை செய்து வருகிறது.

தற்போது சீனாவும், ‘ஒருங்கிணைந்த சீனா’ என்ற கொள்கையின் அடிப்படையில் அதன் அண்டை நாடான தைவான் மீது படையெடுக்க திட்டமிட்டுள்ளது. அவ்வாறு சீனா செய்தால், அது ஆபத்துடன் விளையாடுவதற்கு சமமாகும். தைவான் மீது சீனா படையெடுத்தால், அந்நாட்டை பாதுகாக்க அமெரிக்கா களத்தில் இறங்கும். தைவானுக்கு ஆதரவாக அமெரிக்க ராணுவம் செயல்படும்’ என்றார்.

Related Stories: