கொடைக்கானலில் மலர் கண்காட்சி நாளை துவக்கம்

கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோடைவிழா நாளை (மே 24) முதல் ஜூன் 2ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இதில் மே 29ம் தேதி வரை 6 நாட்கள் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சியும், ஜூன் 2ம் தேதி வரை சுற்றுலாத்துறை சார்பில் கோடைவிழாவும் நடைபெற உள்ளது. இதன் துவக்க விழா நாளை காலை 11 மணிக்கு கலெக்டர் விசாகன் தலைமையில் நடக்கிறது. விழாவை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைக்கிறார். அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மலர்காட்சியையும், அமைச்சர் அர.சக்கரபாணி கண்காட்சி அரங்கையும், அமைச்சர் மதிவேந்தன் கலைநிகழ்ச்சிகளையும் துவக்கி வைத்து சிறப்புரையாற்ற உள்ளனர். நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் எம்.பி வேலுச்சாமி, பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் முன்னிலை வகிக்க எம்எல்ஏக்கள் உள்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Related Stories: