இந்தியாவும், ஜப்பானும் இயற்கையான கூட்டாளிகள்!: இந்திய வளர்ச்சியில் ஜப்பானின் பங்கு முக்கியமானது.. பிரதமர் நரேந்திர மோடி பேச்சு..!!

டோக்கியோ: இந்தியாவின் அனைத்து இடங்களிலும் சுகாதார மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கியுள்ளது. இதில் பங்கேற்க ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் ஆகியோருடன் நடந்த கலந்துரையாடலில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய மோடியும், பைடனும், இந்தோ - பசுபிக் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக பாடுபடுவோம் என்று தெரிவித்தனர். பின்னர், டோக்கியோவில் புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அச்சமயம், இன்று இந்தியா தனது உள்கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டை எந்த வேகத்தில் அதிகரித்து வருகிறது என்பதை உலகம் உணர்ந்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் முக்கிய பங்காற்றியுள்ளது. இந்தியாவும், ஜப்பானும் இயற்கையான கூட்டாளிகள். இந்தியாவின் எரிபொருள் பயன்பாட்டில் விரைவில் 50 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக இருக்கும். உலகம் முழுவதும் பாதிப்பின்றி வர்த்தகம் நடைபெற சுயசார்பு இந்தியா திட்டம் உதவும் என்று குறிப்பிட்டார். மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில், டெல்லி-மும்பை தொழில்துறை வழித்தடம் அல்லது அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தடம் என எதுவாக இருந்தாலும், இவை இந்தியா - ஜப்பான் ஒத்துழைப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Related Stories: