புதுப்பெண் தூக்கிட்டு சாவு: போலீசில் தந்தை புகார்

பெரம்பூர்: சென்னை கொடுங்கையூர் எழில்நகர் 3வது தெருவை சேர்ந்தவர் சிரஞ்சீவி (25). இன்ஜினியரான இவர், திருமுடிவாக்கத்தில்  உள்ள கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகள் காவியாவுக்கும் (19) கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், நேற்று மாலை வீட்டில் இருந்த காவியா, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். இதை பார்த்ததும் கணவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கொடுங்கையூர் போலீசார் சென்று விசாரணை செய்ததில், ‘’காவியாவுக்கு இரண்டு முறை அபார்ஷன் ஆனதால் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இதன்காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்’ என்று தெரியவந்துள்ளது.

இதனிடையே காவியாவின் தந்தை ரவி, கொடுங்கையூர் காவல்நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், ‘’ எனது மகளுக்கு திருமணமாகி 17 மாதம்தான் ஆகிறது. மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதால் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி ஒன்றரை வருடம் ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: