தனுஷ்கோடியில் கடல் அரிப்பு காரணமாக வெளியே தெரியும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கான்கிரீட் குழாய்கள்

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் கடல் அரிப்பு காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பு புயலில் சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலை மற்றும் கான்கிரீட் குழாய்கள் வெளியே தெரிகின்றன. ராமேஸ்வரம் அடுத்துள்ள தனுஷ்கோடியில் கடந்த 1 வாரத்திற்கு மேலாக, வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறைக்காற்று வீசுவதுடன், கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் முகுந்தராயர் சத்திரம் பகுதியில் இருந்து, பழைய தேவாலயம் வரையிலான இடைப்பட்ட கடற்கரை பகுதி முழுவதும் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 1964-ம் ஆண்டுக்கு முன்பு தனுஷ்கோடியில் கான்கிரீட் குழாய்கள் வழியாக தெற்கு கடல் பகுதியில் உள்ள கடல்நீர் வடக்கு பகுதிக்கும், வடக்கு பகுதியில் உள்ள கடல்நீர் தென்கடல் பகுதிக்கும் சென்று சேரும் வகையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் புயல் காரணமாக அந்த பாலம் கடலில் மூழ்கியது. தற்போது ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு காரணமாக கான்கிரீட் குழாய்களானது வெளியே தென்பட்டுள்ளது.

Related Stories: