டூ வீலர்கள் திருட்டு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே மறைமலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். தனியார் நிறுவன ஊழியர். நேற்று மாலை வழக்கம்போல் அடுக்குமாடி குடியிருப்பின் பார்க்கிங் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார். அப்போது மற்றொரு பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், அவரது இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து திருடி சென்றுவிட்டனர்.

இதேபோல் நேற்றிரவு மறைமலைநகர் அருகே பெரிய செங்குன்றம் பகுதியில் வீட்டுவாசலில் நிறுத்தி வைத்திருந்த 2 இருசக்கர வாகனங்களை திருடி சென்றுள்ளனர். இப்புகார்களின்பேரில் மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தமிழ்செல்வனின் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் 2 மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்தனர்.  

முதல் கட்ட விசாரணையில், சென்னை முகலிவாக்கத்தில் நேற்று மாலை கொரியர் டெலிவரி செய்யும் நபரின் பொருட்களின் பையை திருடிய அதே 2 மர்ம நபர்கள்தான், மறைமலைநகரில் 3 இருசக்கர வாகனங்களை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, 2 மர்ம நபர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: