2 மான்கள் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான மாந்தோப்பில் நேற்று மாலை 2 புள்ளிமான்கள் இறந்து கிடப்பதாக சுங்குவார்சத்திரம் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதுகுறித்து பெரும்புதூர் வனச்சரக அலுவலருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். வனச்சரகரின் விசாரணையில், 2 புள்ளிமான்களும் வழி தெரியாமல், சேந்தமங்கலத்தில் மாந்தோப்பு பகுதியில் சுற்றி திரிந்துள்ளன. அங்கு காவலுக்கு இருந்த 2 நாய்கள் துரத்தவே, அங்கிருந்து தப்பிக்க ஓடியபோது முள்வேலியில் சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ளன எனத் தெரியவந்தது.

Related Stories: