×

உக்ரைனில் நாள்தோறும் 100 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!: அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கவலை..!!

கீவ்: உக்ரைனில் நாள்தோறும் 100 ராணுவ வீரர்கள் உயிரிழப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது 2 மாதங்களுக்கும் மேலாக ரஷ்யா, ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கீவ், கார்க்கிவ், சுமி உள்ளிட்ட நகரங்கள், ரஷ்ய தாக்குதலில் கான்கிரீட் குவியல்களாக காட்சியளிக்கின்றன. உக்ரைன் ராணுவத்திற்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட கவச  வாகனங்களை அழித்திருப்பதாக அந்நாடு கூறியுள்ளது.

குண்டுமழை பொழியும் பகுதிகளில் இருந்து  மக்களை உக்ரைன் ராணுவம் அவசர அவசரமாக வெளியேற்றி வருகிறது. இதனிடையே, ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கனடா, ஜப்பான் போன்ற நாடுகள் பல்வேறு உதவிகளை செய்வதுடன், ரஷ்யா மீது எண்ணற்ற பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது. தற்போது, உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையே போர் தொடங்கி 87 நாட்களை கடந்துவிட்டன.

இதுகுறித்து பேசிய அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி, கிழக்கு உக்ரைனின் டான்காஸ் பகுதியில் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளதாக கூறினார். கிழக்கு பகுதியில் நாள்தோறும் சுமார் 100 உக்ரைன் ராணுவ வீரர்கள் வரை நாட்டு மக்களுக்காக தங்களது உயிரை தியாகம் செய்து வருவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


Tags : Ukraine ,President ,Vladimir Zhelensky , Ukraine, 100 soldiers, casualties
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...