விதைகளின் தரத்தை அறிந்து விதைப்பு செய்தால் கூடுதல் மகசூல் பெறலாம்-பரிசோதனை அதிகாரி அறிவுறுத்தல்

பெரம்பலூர் : விதைகளின் தரத்தை அறிந்து விதைப்பு செய்தால் கூடுதல் மகசூல் பெறலாம் என திருச்சி விதைபரிசோதனை அலுவலர் அறிவுறுத்தி உள்ளார்.திருச்சி மண்டல விதைப் பரிசோதனை அலுவலர் மனோன்மணி பெரம்பலூர் விதைப் பரிசோதனை நி லையத்தில் விதைகளின் முளைப்புத் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பி ன்னர் அவர் தெரிவித்ததாவது : பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்காக விதைப் பரிசோதனை நிலையம் பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் மாவட்டமைய நூலகம் மேல் புரத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையத்தில் விதைகளின் தரத்தை அறிந்திட முளைப்புத்திறன், ஈரப்பதம்,சுத்ததன்மை மற்றும் பிற ரகக்கலப்பு ஆகியவை பரிசோதனை செய்யப்படுகிறது.மேலும் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களின் விவசாயிகள் சித்திரை, வைகாசி பட்டம் சாகு படிசெய்யவுள்ள மக்காசோளம் சோளம், உளுந்து, கம்பு, பயறுவகைபயிர்கள், எள் மற்றும்நிலக்கடலை ஆகிய விதைகளின் தரமான நல்விளைச்சலுக்கு அடிப்படை ஆதாரமான விதைகளை விதைத்தாலே 50 சதவீத விளைச்சலுக்கு உத்தரவாதம். அவ்வளவு முக்கியமா ன விதையை தரமானதாக உள்ளதா என்பதைக் கண் டறிந்து விதைத்திடவேண்டும்.

சாகுபடி செய்யப்படவுள்ள விதை குவியலில் இருந்து விதை மாதிரி விதைகளை எடுத்து விதை பரிசோதனை நிலையத்தில் விதைப்பகுப்பாய்வு செய்து கொள்ளலாம்.விதையின் சுத்ததன்மை மற்றும் முளைப்புத்திறன் பரிசோதனைசெய்யப்படுகின்றது. நன்குசுத்தமான தரமான விதைகளை பயன் படுத்துவதால் வாலிப்பான நாற்று, பூச்சிநோய் தாக்குதல் இல்லாத நாற்றுகளை பெறமுடியும். மேலும் நேரடி விதைப்பாக இருக்கும் பட்சத்தில் சரியான பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க முடியும். சரியான பயிர் எ ண்ணிக்கை இருந்தால்தா ன் அதிக மகசூல் எடுக்க முடியும்.

முளைப்புத்திறன் பரி சோத னையில் நன்கு வாலிப்பான நாற்றுகள், இயல்பற்ற நாற்றுகள், இறந்த விதைகள் எத்தனை சதவீதம் உள் ளது என்பதைக் கண்டறியலாம். மேலும் முளைப்புத்திறன் பரிசோதனையின் மூலம் தேவையான விதை அ ளவை தீர்மானிக்கமுடியும்.ஒரு பணிவிதை மாதிரியினை ஆய்வுசெய்திட ஆய்வு கட்டணமாக ரூ.80 மட்டுமே செலுத்த வேண்டும். ஆய்வு முடிவுகள் விவசாயிகளின் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும். எனவே விதைக்கும் முன் விதைகளை பகுப்பாய்வு செய்து விதைத்திடவும் அதிக இடைவெளி ஒதுக்கப்படும் பயிர்களை சாகுபடி வயலில் உளுந்து, பாசிபயறு அல்லது நிலக்கடலை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.

மக்காச்சோள வயலில் வரப்பு பயிராக ஆமணக்கு இதுவரை தட்டைபயிறு அல்லது மொச்சை அவரை, தீவனசோளம் போன்ற வரப்பு பயிர்களின் விதையின் தரத்தை அறிந்து சாகுபடி செய்வதால் கூடுதல் லாபம் பெறுவதோடு மட்டும்மல்லாமல் அமெரிக்கன் படைபுழு மற்றும் ஏனைய பூச்சிதாக்குதலிருந்தும் மக்காசோள ப்பயிரை பாதுக்காக்கலாம் மேலும் களைகள் பாதிப்பி லிருந்து பயிர்களை பாதுக் காக்கலாம்.மேலும் விவரங்களுக்கு மூத்த வேளாண்மை அலுவலர், விதை பரிசோதனை நிலையம் பெரம்பலூர் என் ற முகவரிக்கோ அல்லது கைபேசி எண்: 9597055342, 9629894098 ல் தொடர்பு கொண்டுவிவரங்களை தெ ரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: