மேட்டுமகாதானபுரத்தில் லாரியில் இருந்து சாலையில் சிதறும் கலவை மணலால் டூவீலர்கள் சறுக்கி விபத்து அபாயம்

கிருஷ்ணராயபுரம் : மேட்டுமகாதானபுரத்தில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்திலிருந்து லாரியில் எடுத்துச்செல்லப்படும் சிமென்ட் கலவை ரோட்டில் சிதறி கிடப்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாவதால் மணலை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் மகாதானபுரம் பஞ்சாயத்து மேட்டுமகாதானபுரத்தில் கட்டளைமேட்டு வாய்க்கால் மற்றும் தென்கரை வாய்க்கால் பாசனத்துக்காக செல்கின்றது.

இதில் கட்டளை மேட்டு வாய்க்கால் இருபுறமும் கான்கிரீட் சுவர் அமைக்கும் வேலை தனியார் கட்டுமான நிறுவனம் மூலம் நடைபெற்று வருகின்றது. இவ்வழியாக திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பஞ்சப்பட்டி, தரகம்பட்டி, வையம்பட்டி, மணப்பாறை செல்லும் இணைப்பு நெடுஞ்சாலைத்துறை சாலை உள்ளது. மேட்டு மகாதானபுரத்தில் இரு வாய்க்காலுக்கு அருகே தனியார் கட்டுமான நிறுவனத்தின் பணிமனை செயல்படுகின்றது.

இங்கிருந்து லாரி மூலம் கான்கிரீட் சிமென்ட் கலவை எடுத்து செல்லும்போது மண்ரோட்டில் சிதறுகின்ற அதனை தினந்தோறும் அப்புறப்படுத்தாமல் விடுவதால் ரோட்டில் செல்வோருக்கு கண்ணில் விழுவதால் நிலை தடுமாறி மண்ணில் சறுக்கி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே தனியார் கட்டுமான நிறுவனம் நாள்தோறும் காலை, மதியம் மற்றும் மாலை வேலைகளில் சிதறிக் கிடக்கும் மண்ணை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: