கடும் குளிர் நிலவியதால் வெறிச்சோடிய சூட்டிங்மட்டம்

ஊட்டி :  மழை காரணமாக கடும் குளிர் நிலவிய நிலையில் சூட்டிங்மட்டம் பகுதி சுற்றுலா பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் நகரில் உள்ள சுற்றுலா தளங்கள் மட்டும் பார்ப்பது மட்டுமின்றி நகருக்கு வெளியே உள்ள சுற்றுலா தளங்களான அவலாஞ்சி, பென்ஸ்டாக் காட்சி முனை, எமரால்டு அணை, சூட்டிங்மட்டம், பைன் பாரஸ்ட் போன்ற சுற்றுலா தளங்களை பார்க்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில், ஊட்டியில் கோடை சீசன் களைகட்டியுள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் ஊட்டி நகரின் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளின் கூட்டமாக காணப்படுகிறது. இவர்கள் நகருக்கு வெளியே உள்ள சுற்றுலா தளங்களையும் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். ஊட்டி - கூடலூர் நெடுஞ்சாலையில் சூட்டிங்மட்டம் பகுதி உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த புல்வெளிகள் காணப்படும்.

ந்த பகுதிகளில் தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் இப்பகுதியை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவது வழக்கம். இந்நிலையில் நேற்று பகலில் கனமழை கொட்டிய நிலையில் கடும் குளிர் நிலவியது.

இதனால் மிக குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே பார்த்து ரசித்தனர். இதன் காரணமாக அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. இதனிடையே பகல்கோடுமந்து பகுதிக்கு தமிழக முதல்வர் பாதுகாப்பு பணிக்காக வந்த காவல்துறையினரின் வாகனங்கள் சூட்டிங்மட்டம் பகுதியில் சாலையோரம் உள்ள புல்வெளிகளில் நிறுத்தப்பட்டிருந்தது. மழை காரணமாக சேரும் சகதியுமாக மாறிய நிலையில் காவல்துறை ஜீப் ஒன்று சேற்றில் சிக்கி கொண்டது. இதனை தொடர்ந்து ஜேசிபி உதவியுடன் மீட்கப்பட்டது.

Related Stories: