வரி குறைப்பு போதாது!: ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து மே 25 முதல் ஒரு வாரம் போராட்டம்..கம்யூ., விசிக கூட்டாக அறிவிப்பு..!!

சென்னை: ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து நாளை மறுநாள் முதல் 31ம் தேதி வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் கூட்டாக பேட்டியளித்தனர்.  அப்போது பேசிய கே.பாலகிருஷ்ணன், மே 25ல் இருந்து 31 வரை நாடு தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம்.

இடதுசாரி கட்சிகளுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது. ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். ஒன்றிய பெட்ரோல், டீசல் வரி குறைப்பு போதாது. பெட்ரோல், டீசல் விலையில் 200 சதவீத அளவுக்கு விலையை உயர்த்திவிட்டு வெறும் 7 சதவீதத்தை மட்டுமே குறைந்திருப்பது என்பது போதாது. பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரி உள்ளிட்ட வரிகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் பருத்தி விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஒன்றிய பாஜக அரசின் நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். மே 26, 27ல் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். தொடர்ந்து பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து போராட்டம் நடத்தப்பட இருப்பதாக திருமாவளவனை தெரிவித்தார்.

Related Stories: