பிலிப்பைன்ஸ் குயிசோன் மாகாணத்தில் கடலில் சென்ற படகு தீப்பிடித்து 7 பேர் உயிரிழப்பு; 120 பயணிகள் மீட்பு

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் படகு தீப்பிடித்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 120 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். குயிசோன் மாகாணத்தில் கடலில் சென்ற படகு தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. படகில் சென்ற 120 பயணிகளை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர். பிலிப்பைன்ஸ் நாட்டில், பொலிலியோ தீவிலிருந்து கியுசான் மாகாணத்தில் உள்ள ரியல் நகரத்தில் உள்ள துறைமுகம் நோக்கி படகு ஒன்று சென்றுகொண்டிருந்தது.

அந்த படகில் சுமாா்135 போ் பயணித்து கொண்டிருந்தனா். அப்போது படகின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு தீ பிடித்தது. பிறகு தீயானது படகு முழுவதும் பரவியது. இதனால் ஏற்பட்ட கரும்புகை காரணமாக பலா் மயங்கி விழுந்தனா். பலா் உயிா்தப்பிப்பதற்காக கடலில் குதித்தனா். இந்த விபத்தில் 7 போ் தீயில் கருகி பாிதாபமாக உயிாிழந்தனா். சுமாா் 120 போ் மீட்கப்பட்டள்ளனா்.

இந்த விபத்து குறித்து துறைமுக அதிகாாிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் போில் அங்கு விரைந்து வந்த அதிகாாிகள் படகில் இருந்தவா்களை மற்றொரு படகு முலம் மீட்டு கரைக்கு கொண்டு சென்றனா். மயக்கமடைந்தவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் முலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இந்த விபத்தில் 4 பேரை காணவில்லை என அதிகாாிகள் தொிவித்தனா்.

Related Stories: