×

ஆஸ்திரேலியாவின் 31வது பிரதமராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த அந்தோனி ஆல்பனிஸ் பதவியேற்றுக் கொண்டார்!!

கான்பெரா: ஆஸ்திரேலியாவின் 31வது பிரதமராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த அந்தோனி ஆல்பனிஸ் பதவியேற்றுக் கொண்டார். ஆஸ்திரேலியாவில் 151 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்திற்கு நேற்று முன்தினம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் லிபரல் கட்சி தலைவரும், பிரதமருமான ஸ்காட் மோரிசனுக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தலைவர் அந்தோனி ஆல்பனிஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது. இந்த நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் மொத்தமுள்ள 151 எம்பி இடங்களில் லிபரல் கட்சி கூட்டணி 52 இடங்களையும், தொழிலாளர் கட்சி 72 இடங்களையும் கைப்பற்றி உள்ளன. வெற்றிப் பெற 76 இடங்கள் தேவை என்ற நிலையில், 72 இடங்களை தொழிலாளர் கட்சி கைப்பற்றியதன் முலம், அல்பானிஸ் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். தனது தோல்வியை ஸ்காட் மோரிசன் ஒப்பு கொண்டுள்ளார். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் 31வது பிரதமராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த அந்தோனி ஆல்பனிஸ் பதவியேற்றுக் கொண்டார்.

கான்பெராவில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சி ஒன்றில் அவருக்கு ஆஸ்திரேலியா கவர்னர் ஜெனரல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அந்தோனி ஆல்பனிஸை அடுத்து ரிச்சர்ட் மார்லெஸ் துணை பிரதமராக பதவியேற்றுக் கொண்டனர். தொடர்ந்து அமைச்சர்கள் சிலரும் பதவியேற்றுக் கொண்டனர். ஜப்பானில் நடைபெற்று வரும் குவாட் உச்சி மாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் பங்கேற்பது அவசியம் என்பதால் அந்தோனி ஆல்பனிஸ் இன்றே பதவி ஏற்று கொண்டுள்ளார்.Tags : Anthony Albanis ,Labor Party ,Prime Minister of ,Australia , Australia, Prime Minister, Labor, Anthony Albanis
× RELATED 30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு