×

பேட்டரி வடிவமைப்பு குறைபாடும், சரிவர பரிசோதிக்கப்படாததுமே இ - ஸ்கூட்டர்கள் தீப்பிடிக்க காரணம் : டி.ஆர்.டி.ஓ ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

டெல்லி : உள்நாட்டின் தயாரான இ - ஸ்கூட்டர்கள் அடிக்கடி தீப்பற்றி எரிவது ஏன் என்பது குறித்து டி.ஆர்.டி.ஓ ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இருசக்கர வாகன விற்பனையில் இ - ஸ்கூட்டர்களின் பங்கை 2%ல் இருந்து 80% ஆக அதிகரிக்க வேண்டும் என்பது ஒன்றிய அரசின் நோக்கம். ஆனால் புதிதாக வாங்கப்பட்ட இ - ஸ்கூட்டர்கள் பலவும் ஆங்காங்கே தீப்பிடித்து எரிந்து உயிர்களை காவு வாங்கியது ஒன்றிய அரசின் நோக்கம் நிறைவேற பெரும் இடையூறாக அமைந்தது. இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தை ஒன்றிய சாலை, போக்குவரத்துத் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது.

அதன்படி டிஆர்டிஓ நடத்திய ஆய்வில் இ - ஸ்கூட்டர்களில் பேட்டரி வடிவமைப்பில் குறைபாடுகள் இருப்பது தெரியவந்தது. அத்துடன் இ - ஸ்கூட்டர்கள் சரிவர பரிசோதிக்கப்படாமல் அவசரகத்தியில் விற்பனை சந்தைகளுக்கு அனுப்பப்பட்டது காரணமாக இருக்கலாம் என்றும் டி.ஆர்.டி.ஓ  ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. செலவினத்தை குறைக்க இ - ஸ்கூட்டர்கள் தயாரிப்பு நிறுவனங்கள் வேண்டுமென்றே தரமற்ற பொருட்களை பயன்படுத்தி இருப்பதையும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்  உறுதிப்படுத்தியுள்ளது.


Tags : T. R.R. TD , Battery, design, e-scooters, fire, DRDO
× RELATED பேட்டரி வடிவமைப்பு குறைபாடும், சரிவர...