×

ஒரகடம் அருகே ரூ.155 கோடியில்‌ 100 படுக்கைகள்‌ கொண்ட இஎஸ்ஐசி மருத்துவமனை: ஒன்றிய அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

சென்னை: ஒரகடம் அருகே ரூ.155 கோடியில் 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐசி மருத்துவமனை அமைக்க ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவ் அடிக்கல் நாட்டினார்.  பெரும்புதூர், ஒரகடம், சுங்குவார்சத்திரம், இருங்காட்டுகோட்டை, வல்லம்-வடகால் ஆகிய பகுதிகளில் சிப்காட் தொழிற்பூங்கா மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பகுதிகளில் ஏராளமான பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தொழிற்சாலைகள்‌ இயங்கி வருகின்றன. இங்கு வெளிமாநில மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த சுமார்‌ 3 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள்‌ வேலை செய்கின்றனர்.

தொழிலாளர்களின் மருத்துவ வசதிக்கு போதிய வசதியின்றி வாடகை கட்டிடத்தில் ஒரே ஒரு இஎஸ்‌இசி மருத்துவமனை  மட்டுமே இருக்கிறது. இதனால்‌, முக்கிய மருத்துவ சேவைகளை தொழிலாளர்கள்‌ பெற முடியாத நிலை இருந்தது. இதனால் பெரும்புதூர் பகுதியில் இஎஸ்‌ஐசி மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்‌தது. இதைத்‌ தொடர்ந்து பெரும்புதூரில் இஎஸ்ஐசி மருத்துவமனை கட்ட ஒன்றிய தொழிலாளர்‌ வேலைவாய்ப்பு துறை அமைச்சகம்‌ முடிவு செய்து, இதற்கான நிலத்தை ஒதுக்கி தரும்படி தமிழக அரசிடம்‌ ஒன்றிய அரசு வலியுறுத்தியது.

இதனையடுத்து ஒரகடம் அடுகே வல்‌லம்‌-வடகால் சிப்காட் பகுதியில் 5.12 ஏக்‌கர்‌ நிலத்தை தமிழக அரசு ஒதுக்கி தந்துள்ளது. இப்பகுதியில் 100 படுக்கைகள்‌ கொண்ட   இஎஸ்ஜசி மருத்துவமனை அமைப்பதற்கு ஒன்றிய அரசு ரூ.155 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவ், தொழிலாளர்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ பெட்ரோலிய துறை இணையமைச்சர்‌ ராமேஸ்வர்‌ தெளி ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

இந்த மருத்துவமனையில் தொழிலாளர்‌ மற்றும்‌ அவர்களது குடும்பத்தினர்‌  8 லட்சம்‌ பேர்  பயனடையவுள்ளனர். மேலும் அவசர சிகிச்சைப்‌ பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சைப்‌ பிரிவு, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் போன்ற நவீன சிகிச்சை வசதிகள்‌ செய்யபட உள்ளது. மேலும் பல்‌ மருத்துவம்‌, பொது மருத்துவம், புறநோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவு உள்பட அனைத்து விதமான மருத்துவ வசதிகளுடன் இந்த மருத்துவமனை அமைய உள்ளது. இந்த விழாவில் காஞ்சிபுரம் ஆட்சியர்  எம்.ஆர்த்தி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags : ESIC ,Oragadam ,Union Minister , Orakadam, Beds‌, ESIC Hospital, Union Minister
× RELATED கடந்த 10 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி பாஜக...