சென்னையில் கடந்த வாரத்தில் மட்டும் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 1,026 கிலோ போதை பொருள் பறிமுதல்: சென்னை காவல் ஆணையரகம் அதிரடி

சென்னை: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், ‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை’ மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 15 ம் தேதி  முதல் நேற்று  வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 28 நபர்கள் கைது  செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 1026 கிலோ 530 கிராம் எடை கொண்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள்,  200  கிராம்  மாவா மற்றும் 1 ஆட்டோ  பறிமுதல்  செய்யப்பட்டது.

இதில், H-6 ஆர்.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று மதியம், எழில்நகர், சர்வீஸ் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு 5 நபர்கள் ஒரு ஆட்டோவில் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் அருகில் சென்று விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், ஆட்டோவில் ஏற்றிய மூட்டையை சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், சென்னை காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: