தமிழகத்தில் மதுவிலக்கு: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் மதுவிலக்கை செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘திருப்பெரும்புதூரை அடுத்த சின்ன மதுரப்பாக்கத்தில் குடிபோதையில் தந்தையே இரு மகள்களை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு குடும்பம் மதுவால் சீரழிந்து கொண்டு தான் இருக்கிறது.

குடியால் குழந்தைகளின் உணவு, கல்வி, எதிர்காலம் பறிக்கப்படுகின்றன. தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், மதுவிலக்கை ஏற்படுத்துவது தான் தமது நோக்கம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அதை செயல்படுத்துவதற்காக நேரம் வந்து விட்டது. எனவே, இனியும் தாமதிக்காமல் மதுவிலக்கை செயல்படுத்துவதற்கான கால அட்டவணையை அரசு அறிவிக்க வேண்டும்.

Related Stories: