×

தெ.ஆப்ரிக்கா, இங்கி.க்கு எதிரான இந்திய அணிகள் அறிவிப்பு

மும்பை: ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்து நடைபெற உள்ள தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களுக்கான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியா- தென் ஆப்ரிக்கா இடையே 5 ஆட்டங்களை கொண்ட டி20 தொடர் ஜூன் 9, 12, 14, 17, 19 தேதிகளில் முறையே டெல்லி, கட்டாக், விசாகப்பட்டினம், ராஜ்காட், பெங்களூர் ஆகிய நகரங்களில் நடைபெறும். இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. கேப்டன் ரோகித் சர்மா, கோஹ்லி, பும்ரா, ஷமி, அஷ்வின், ஜடேஜா என முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் கே.எல்.ராகுல் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் ஐபிஎல் தொடரில் கலக்கிய உம்ரன் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் முதல்முறையாகவும், தினேஷ் கார்த்திக் 3 ஆண்டுகளுக்கு பிறகும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

* டி20 அணி
ராகுல் (கேப்டன்), ருதுராஜ், இஷான் (விக்கெட் கீப்பர்), தீபக், ஸ்ரேயாஸ், ரிஷப் (துணைக் கேப்டன், வி.கீ), தினேஷ் கார்த்திக் (வி.கீ), ஹர்திக், வெங்கடேஷ், சாஹல், குல்தீப் யாதவ், அக்சர், பிஷ்னாய், புவனேஸ்வர், ஹர்ஷல், ஆவேஷ்கான், அர்ஷ்தீப், உம்ரன் மாலிக்

* டெஸ்ட் அணி
இங்கிலாந்துக்கு எதிரான  தள்ளி வைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டி ஜூலை ஒண்ணாம் தேதி பிர்மிங்ஹாமில் தொடங்குகிறது. இந்த ஆட்டத்தில் விளையாட உள்ள ரோகித் சர்மா தலைமையிலான அணியும் நேற்று அறிவித்தனர். அதில் ரகானே, மயாங்க், பிரித்வி ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. அந்த அணியில் ரோகித் (கேப்டன்), ராகுல்(து.கேப்டன்), ஷூப்மன், கோஹ்லி, ஸ்ரேயாஸ், ஹனுமா விகாரி, புஜாரா, ரிஷப்(விக்கெட் கீப்பர்), பரத்(விகீ), ஜடேஜா, அஷ்வின்,  ஷர்துல், ஷமி, பும்ரா, சிராஜ், உமேஷ் பிரசித்  ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Tags : South Africa ,England , Announcement of Indian teams against South Africa, England
× RELATED இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையேயான...