ஜம்மு காஷ்மீரில் சுரங்க விபத்து குறித்து விசாரிக்க 3 பேர் குழு: ஒன்றிய அரசு அமைத்தது

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்ட சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்த விபத்து குறித்து ஆய்வு செய்ய 3 நிபுணர்கள் கொண்ட குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரம்பன் மாவட்டம், கூனி நல்லா பகுதி அருகே சுரங்கப்பாதை கட்டும் பணி நடந்து வந்தது. கடந்த 19ம் தேதி இரவு திடீரென சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், பணியில் ஈடுபட்டிருந்த 10 தொழிலாளர்கள் இடிபாட்டில் சிக்கி பரிதாபமாக இறந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்த 3 நிபுணர்கள் கொண்ட குழுவை ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் நேற்று அமைத்து உத்தரவிட்டுள்ளது. டெல்லி ஐஐடி பேராசிரியர் சாஹு தலைமையிலான இக்குழு, விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்து, சுரங்கப் பகுதி எப்படி இடிந்தது, எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்தை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து 10 நாளில் அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: