திருத்தணி: திருத்தணி அடுத்த அமிர்தாபுரம் கிராமம் பஜார் தெருவில் நேற்று முன்தினம் இரவு புள்ளிமான் இறந்து கிடந்தது. தகவலறிந்த திருத்தணி போலீசார் மற்றும் திருத்தணி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து புள்ளிமானை மீட்டு திருத்தணி கால்நடை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்துபோன மானை யாராவது கல்லால் அடித்து துன்புறுத்தினார்களா அல்லது நாய்கள் கடித்து இறந்ததா என பல்வேறு கோணங்களில் போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.