பள்ளி மாணவர்களுக்கு வேளாண் பயிற்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஆதிரங்கம் நெல் ஜெயராமன் நெல் பாதுகாப்பு மையம் சார்பில் 2 நாள் தேசிய அளவிளான நெல் திருவிழா நேற்று துவங்கியது. இதில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: கடந்த ஆட்சி காலத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா அறிவிக்கப்பட்டது. ஆனால் எந்த ஒரு செயல்பாடும் இல்லை. திமுக அரசு பொறுப்பேற்றவுடன் வேளாண்மை பாதுகாப்பு மண்டல குழு கூட்டம் நடந்தது.

அந்த கூட்டத்தில் விளைநிலங்களை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன்படி விளை நிலங்களை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அரசு அனுமதிக்காது. விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் கருத்துக்கள் ஆவணப்படுத்தப்பட்டு அதில், எது தேவையோ அதை அரசு செயல்படுத்தி வருகிறது. பள்ளி அளவில் விவசாயத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளிகளில் பசுமை படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூலம் காய்கறிகள் விளைவிப்பது போன்ற விவசாய பயிற்சிகள் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: