×

ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கையில் நல்லது எதுவும் இல்லை; அமைச்சர் பொன்முடி பேச்சு

திருச்சி: திருச்சி மாநகர திமுக சார்பில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு புத்தூர் நான்குரோட்டில் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர்கள் ேக.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அரசின் சாதனைகளை விளக்கி பேசினர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது: ஓராண்டில் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செய்திருக்கிற சாதனைகள் ஏராளம். திராவிட மாடல் அரசு என்றால் என்ன? என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

அனைத்து மதத்தினரும், அனைத்து சாதியினரும், அனைத்து மொழிகள் பேசுபவர்களும் எல்லோரும் மனிதர்கள் என்ற நேயத்தோடு சமமாக வாழ வேண்டும் என்பதுதான் திராவிட மாடல். அந்த சமத்துவம் தான் திராவிட மாடலின் அடிப்படை ெகாள்கை. மொழிக்கான உரிமையை பெற்றுத்தர வேண்டும் என்பதுதான் திராவிட மாடல். தற்போது மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை கல்வி படிக்கும் மாணவர்களுக்கும், ஒன்றிய அரசு நுழைவுத்தேர்வு அறிவித்துள்ளது. மருத்துவ கல்விக்கான நீட் தேர்வை கூடாது என நாம் வலியுறுத்தி வருகிறோம். ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கையில் நல்லது எதுவும் இல்லை. 3,5,8 வகுப்புக்கும் நுழைவுத்தேர்வு உண்டு. எனவே தான் தமிழ்நாடு கல்விக்கொள்கையை முதல்வர் உருவாக்கியுள்ளார்.

Tags : United States ,Minister ,Ponmudi , There is nothing good in the new education policy of the United States; Minister Ponmudi's speech
× RELATED வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள்...