×

சட்டவிரோதமாக மதுபான விருந்து நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: காவல் ஆணையர் எச்சரிக்கை.!

சென்னை: சட்டவிரோதமாக மதுபான விருந்து நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையின் மையப்பகுதியான கோயம்பேடு அருகே வி.ஆர்.மால் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில் உணவகங்கள், துணிக்கடை, செல்போன் மற்றும் நகைக்கடை என அனைத்து வசதிகளும் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிவதுண்டு. அதிலும், விடுமுறை நாட்களில் இந்த வணிக வளாகம் கூட்ட நெரிசலாக தான் காணப்படும்.
இந்த நிலையில் இந்த வணிக வளாகத்தில் நான்காவது தளத்தில் பிரேசிலை சேர்ந்த ‘MANDRAGORA’ என்ற உலகப் புகழ்பெற்றவரின் பெயரால் DJ ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொள்ள ரூ.1500 கட்டணம் பெறப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியானது காவல் துறையின் அனுமதியின்றி நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருமங்கலம் மற்றும் அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் 900க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் மது போதையில் இருந்ததுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு எந்த முன் அனுமதியும் பெறவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இவர்களிடமிருந்து 844 விலை உயர்ந்து மதுபாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த துரை, விக்னேஷ், பரத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனமாடிய தனியார் ஐடி நிறுவன ஊழியர் பிரவீன் என்பவர் திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்ட நண்பர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் இவர் அளவுக்கு அதிகமான மதுபானம் அருந்த காரணத்தினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானக் கூடங்கள் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அனுமதியின்றி கேளிக்கை நிகழ்ச்சிகள் மற்றும் மது விருந்து நிகழ்ச்சிகள் நடத்துபவர்களுக்கு காவல் ஆணையர் சங்கர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், சட்டவிரோத மது விருந்து நடத்தப்பட்ட மாலுக்கு கலால்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

Tags : Strict action will be taken against those who hold illegal liquor parties: Commissioner of Police warns!
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...