எரிபொருள் விலை குறைப்பு குறித்த அறிவிப்பால் மக்களை முட்டாளாக்குவதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்: ராகுல் காந்தி ட்வீட்

டெல்லி: எரிபொருள் விலை குறைப்பு குறித்த அறிவிப்பால் மக்களை முட்டாளாக்குவதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் விலை 110 ரூபாயையையும், டீசல் விலை 100 ரூபாயையும் தாண்டி விற்பனையானதால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது. கடந்த 45 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில்,  பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து நேற்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி பெட்ரோல் ரூ.8.22, டீசல் ரூ.6.70 குறைக்கப்பட்டது.

இந்த வரிக்குறைப்பு குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி; பெட்ரோல், டீசல் விலை இனி நாள்தோறும் மீண்டும் ரூ.0.8, ரூ.0.3 என உயரத் தொடங்கும். உண்மையான நிவாரணத்தை மக்களுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டும். பணவீக்கத்திலிருந்து உண்மையான நிவாரணத்தை பெற பொதுமக்களுக்கு தகுதி உள்ளது. எரிபொருள் விலை குறைப்பு அறிவித்த அறிவிப்பால் மக்களை முட்டாளாக்குவதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: