×

மீன் பிடி தடை காலம், கேரள மீன் வரத்து குறைவு எதிரொலி: மீன்கள் விலை கிடுகிடு உயர்வு,

தொடர்மலை மீன்பிடி தடை காலம் கேரள மீன் வரத்து குறைவால் கோவையில் மீன்கள் வில்லை அதிகரிதுள்ளது, கோயம்பத்தூர் லாரிப்பேட்டை மீன் சந்தைக்கு மீன்கள் வரத்து குறைந்துள்ளது, 10 லாரிகள் வரவேண்டிய இடத்தில் 3 லாரி மீன்களே வந்துள்ளன இதனால்  ஞாயிற்றுக்கிழமையான இன்று மீன்கள் விலை கிடுகிடு என உயர்ந்து காணப்படுகிறது. வஞ்சிரம் மீன் சென்ற வரம் கிலோ ரூ.800 முதல் 900 க்கு  விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.1300 முதல் 1400க்கு வரை அதிகரித்து விற்கப்படுகிறது.

வவ்வால் மீன் கிலோ ரூ. 700க்கு முதல் 800 க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று கிலோ 1000 க்கு  விற்கப்படுகிறது, இயிலை, மாத்தி, நெத்திலி உள்ளிட்ட அனைத்து மீன்களும் வழக்கத்தைவிட அதிகப்படியான  விலை உயர்வினால் மீன் வாங்க வந்த வாடிக்கையாளர்கள் குறைத்த அளவில் மீன்களை வாங்கி சென்றனர், மீன்பிடி தடை காலம்  நீடித்துவருவதால் தான் சென்னை காசிமேட்டிலும் பெரிய வகை மீன்ளுக்கு தட்டுப்பாடு நிலவியது ஞாயிறுகிழமை என்பதால் வெளிமாவட்டங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் எராளமானோர் காசிமேடு மீன் பிடி சந்தைக்கு மீன்களை வாங்க வந்து குவிந்தனர். இதனால் வழக்கத்தைவிட மீன்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது.

 சிறிய வகை வஞ்சிரம் கிலோ ரூ. 700 க்கு  விற்பனைசெய்யப்பட்ட நிலையில் இன்று கிலோ ரூ. 1300 க்கு விற்பனை செய்யப்படுகிறது சங்கரா மீன் கிலோ ரூ .400க்கு இருந்து ரூ. 800 க்கு விற்பனையாகிறது, கிலோ ரூ. 700க்கு  விற்கப்பட்ட வவ்வால் ரூ.  1200 ஆக உயந்துள்ளது. பாறை கிலோ ரூ. 600 க்கு  விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிலோ ரூ. 1100 க்கு விற்பனையாகிறது கிலோ ரூ. 400 க்கு விற்கப்பட்ட இறால், ஒரு மடங்கு உயர்ந்து கிலோ ரூ. 800 க்கு விற்பனையாகிறது. 


Tags : Kerala , Fishing ban, echoes of declining fish stocks in Kerala: Fish prices soar,
× RELATED தடை காலம் நிறைவடைவதையொட்டி...