வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா சிறுதலைக்காடு மேல தெருவை சேர்ந்தவர் குமார்(45). இவரது மனைவி தனபாக்கியம்(35). இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் குமார், தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த குமார், மனைவி மீது சந்தேகப்பட்டு அவரது கையை பின் பக்கத்தில் வைத்து கட்டி வாயில் பூச்சி மருந்தை ஊற்றி கொல்ல முயன்றார்.