வரதட்சனை கொடுமையால் இளம்பெண் தற்கொலை

கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வில்லுக்குறி கீழபள்ளம் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது 2வது மகள் அஜிதா (27). இளங்கலை பட்டதாரி. உசரல்விளை பகுதியை சேர்ந்த டிரைவர் செல்வின் சுனில் ராஜிக்கும், அஜிதாவுக்கும் கடந்த 2018ல் திருமணம் நடந்தது. அப்போது ரூ. 2 லட்சம், 10 பவுன் தங்க நகை, வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை அஜிதாவின் பெற்றோர் வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பிறகு செல்வின் சுனில் ராஜ் வெளிநாட்டில் வேலைக்கு சென்றார். இதற்கிடையே கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஊருக்கு வந்தார். இந்த நிலையில் அவர் ஒழுங்காக வேலைக்கு செல்லவில்லை என்று தெரிகிறது. இதனால் கணவன் - மனைவி இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அஜிதா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப் போட்டுவிட்டதாக கூறி அவரை தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.

இந்த தகவல் அறிந்ததும் அவரது தாய், தந்தை ஆகியோர் தக்கலை அரசு மருத்துவமனைக்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது அங்கு அஜிதா இறந்து போன தகவல் அறிந்து அறிந்து அவர்கள் அலறி துடித்தனர். இதுகுறித்து அஜிதாவின் தந்தை பால்ராஜ் தக்கலை காவல் நிலையத்தில் புகார் ெசய்தார். அதன்பேரில், அஜிதாவின் கணவர் செல்வின் சுனில் ராஜ், அவரது தாயார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

தொடர்ந்து அஜிதா தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் வரதட்சனை கொடுமையா? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உண்டா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: