×

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துளளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வெப்பச்சலனத்தால் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான வாய்ப்பு உள்ளது. இன்று முதல் மே 26 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும்.

இன்று வங்கக்கடலின் மத்திய கிழக்கு பகுதி, வட அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி வீச வாய்ப்பு உள்ளது. லட்சத்தீவு, கர்நாடகா, கேரளா, தென் தமிழக கரையோரத்தில் இன்று பலத்த சூறாவளி வீசக்கூடும். நாளை வங்கக்கடலின் மத்திய கிழக்கு, வட அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி வீசக்கூடும். மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு இன்றும் நாளையும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,Meteorological Research Centre , Tamil Nadu likely to receive moderate rains for the first 5 days today: Meteorological Department
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...