சுகாதாரத்துறை ஒப்பந்த பெண் ஊழியர்களுக்குக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை: சுகாதாரத்துறை ஒப்பந்த பெண் ஊழியர்களுக்குக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணிபுரியும் 4,848 செவிலியர்கள் ஊதியம் ரூ 14,000-ல் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  2,448 சுகாதார பணியாளர்களுக்கு ரூ.11,000-ல் இருந்து ரூ,14,000 ஆக ஊதியம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். 5,971 பேருக்கு ரூ.32 கோடி செலவில் ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Related Stories: