ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்தவர் பலி

தண்டையார்பேட்டை: செங்குன்றத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை மாநகர பஸ் (தடம் எண் 157) திருவொற்றியூர் புறப்பட்டது. தண்டையார்பேட்டை, இளையமுதலி தெரு வழியாக பஸ் சென்றபோது, போதையில் பஸ்சில் பயணித்த ஒருவர், முன்புற படிக்கட்டில் இருந்து திடீரென கீழே குதித்தார். இதில் பஸ்சின் பின்புற சக்கரத்தில் சிக்கி அவரது 2 கால்களும் நசுங்கியதால், ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார். தகவலறிந்து வந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார், அந்த நபரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் இறந்தார். விசாரணையில், புதுவண்ணாரப்பேட்டை வஉசி நகரை சேர்ந்த ரமேஷ் (40) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: