சிறுமிகளை கடத்தி பலாத்காரம் வாலிபருக்கு குண்டாஸ்

சென்னை: சூளைமேடு நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்த ஜெயசூரியா (24), அதேபகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை காதலித்து, கடந்த மாதம் 24ம் தேதி அரும்பாக்கத்தில் உள்ள லாட்ஜிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி அறிந்த அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலை போலீசார், ஜெயசூரியாவை போக்சோ சட்டத்தில் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். விசாரணையில், ஜெயசூரியா இதேபோல், ஆயிரம்விளக்கு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து, கடத்தி பலாத்காரம் செய்ததும், இதுதொடர்பாக ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் இவர்மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதும் தெரியவந்தது. எனவே, இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மகளிர் போலீசார், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தனர். அதன்பேரில், காவல் ஆணையர் ஜெயசூரியாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, போலீசார் ஜெயசூரியாவை குண்டாசில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Related Stories: