முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு: நாடு முழுவதும் 2 லட்சம் பேர் எழுதினர்

சென்னை: நாடு முழுவதும் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நேற்று நடந்தது. நாடு முழுவதும் 2 லட்சம் பேர் தேர்வு எழுதினர். நாடு முழுவதும் 2022-23ம் ஆண்டிற்கான முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வை 2 லட்சம் பேர் எழுதினர். இதற்காக, 256 தேசிய தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, சேலம், கோவை, திருநெல்வேலி, திருச்சி, புதுக்கோட்டை, வேலூர், தேனி, விழுப்புரம், ஈரோடு, கரூர், விருதுநகர், திருவாரூர், திருவண்ணாமலை, திருப்பூர், தூத்துக்குடி, தஞ்சை, ராமநாதபுரம், பெரம்பலூர், நாமக்கல், நாகர்கோவில், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தர்மபுரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்வு நடந்தது.

மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அடையாள அட்டை மற்றும் புகைப்படம் பொருந்திய பான் கார்டு, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஏதேனும் ஓர் அடையாள அட்டையுடன் வந்திருந்தனர். கைக்கடிகாரம், மொபைல், கால்குலேட்டர் போன்றவற்றுக்கு தடை செய்யப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றி, அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருந்தனர். 800 மதிப்பெண்ணுக்கு 200 கேள்விகள் என முதுநிலை நீட் தேர்வு நடந்தது. காலை 9 மணிக்கு துவங்கிய தேர்வு 12.30 மணி வரை நடந்தது.

Related Stories: