ரூ.5.8 கோடி மதிப்பீட்டில் சமத்துவபுரம் வீடுகள் மறுசீரமைக்கும் பணி: அமைச்சர் நாசர் அடிக்கல் நாட்டினார்

திருவள்ளூர்: பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், குத்தம்பாக்கம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சமத்துவபுரம் வீடுகளை ரூ.5.8 கோடி மதிப்பீட்டில் பழுதுபார்த்தல், புனரமைத்தல் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் டி.தேசிங்கு, ஒன்றிய துணைத் தலைவர் பரமேஷ்வரி கந்தன், ஒன்றியக் கவுன்சிலர் வழக்கறிஞர் என்.பி.மாரிமுத்து, ஊராட்சி மன்றத் தலைவர்கள் நேமம் என்.எஸ்.ஜெ.பிரேம்நாத், கூடப்பாக்கம் ஜெகதா ஜேம்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், செயற்பொறியாளர் வ.ராஜவேல் ஆகியோர் வரவேற்றனர். விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பணிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து நேமம் ஊராட்சியில் ரூ.37 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட துணிப் பை உற்பத்தி மையத்தை அமைச்சர் துவக்கி வைத்து துணிப் பை தயாரிப்பு பணிகளை பார்வையிட்டார். பிறகு, கூடப்பாக்கம் ஊராட்சியில் மேட்டுக்கண்டிகை தாங்கல் ஏரி சீமை கருவேலம் மரங்கள் அகற்றும் பணிகளையும், ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் ஒரு ஏக்கர் பரப்பளவில் 1 மீட்டர் ஆழத்திற்கு புதிதாக குளம் வெட்டும் பணிகளையும் அமைச்சர் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

 

இதில் உதவி இயக்குநர் சுதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியம், சிவக்குமார், மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் ஜெரால்டு, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் ரமேஷ், விமல் வர்ஷன், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் வல்லூர் ரமேஷ்ராஜ், மாவட்ட கவுன்சிலர் உதயசூரியன், கமலேஷ், ஜனார்த்தனன், அண்ணாமலை செட்டியார், கட்டதொட்டிகுணசேகரன், கந்தபாபு, சுமதி விஜயக்குமார், கந்தன், மூர்த்தி, குணசேகரன், கருணாநிதி, சுகுமார், நேமம் ரமேஷ், பரணிதரன், சாக்ரடீஸ், பிரவீன்குமார், ராஜேஷ், சர்மன்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: