பெண்ணிடம் செயின் பறிப்பு

சென்னை: ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் சுரேஷ்(58). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி குணசுந்தரி(49), நேற்றுமுன்தினம் மாலை பாடியநல்லூரில் உறவினரின் ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு டூவீலரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். இந்நிலையில், வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வந்தபோது, அவரை பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் வழிமறித்து, அவரது கழுத்தில் இருந்த 2 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினர். புகாரின்பேரில் முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: