காஞ்சிபுரம் மாவட்டம் சிசிடிவி கேமராக்கள் அமைப்பதில் முன்னோடி: வடக்கு மண்டல காவல்துறை தலைவர் பேச்சு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கண்காணிக்கும் பொருட்டும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் சிசிடிவி கேமராக்களை பொருத்தும் பணி கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வருகிறது. அவ்வகையில் சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்லவர் மேடு பகுதியில் சுமார் 3.5 லட்சம் மதிப்பில் புற காவல் நிலையம் கட்டிடம், ரூ.15 லட்சம் மதிப்பில் 51 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. வடக்கு மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்ஹா மற்றும் காஞ்சி சரக காவல்துறை துணை தலைவர் எம் சத்யபிரியா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் தலைமை தாங்கினார். வடக்கு மண்டல தலைவர் பிரேம் ஆனந்த சின்ஸா பேசியது, காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சிசிடி கேமரா பொருத்துவதில் முன்னோடியாக நிகழ்ந்து வருவது மகிழ்ச்சி. இனிவரும் காலங்களில் காவல் துறைக்கு முக்கிய தடயங்களாக இருப்பது குற்றங்களை தடுக்க உதவும் சிசிடிவி கேமராக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றார். டிஎஸ்பி வினோத் சாந்தாராம்  டிஎஸ்பி ஜூலியஸ் சீசர், இன்ஸ்பெக்டர்கள் விநாயகம், வெங்கடேசன், திவான், மாநகராட்சி உறுப்பினர் மவுலி சசிகுமார், பரணி பில்டர்ஸ் பரணிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: