கேன்ஸ் திரைப்பட விழாவில் அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு

சென்னை: 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக ஒன்றிய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று பிரான்ஸ் சென்றார். அவரை பிரான்சுக்கான இந்திய தூதர் ஜாவேத் அஷ்ரப் வரவேற்றார்.

இதுகுறித்து எல்.முருகன் தனது டிவிட்டரில், ‘பிரான்சில் உள்ள இந்திய தூதர் ஜாவேத் அஷ்ரப்பை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா, பிரான்ஸ் உறவுகள் மற்றும் கேன்ஸ் திரைப்பட விழா உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் உரையாடினோம்’ என்று பதிவிட்டுள்ளார். கேன்ஸ் திரைப்பட விழாவில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று முதல் வரும் 24ம் தேதி வரை பங்கேற்கும் அவர், வரும் 25ம் தேதி காலை டெல்லி திரும்புகிறார்.

Related Stories: