ஜப்பானில் குவாட் உச்சி மாநாடு 23 நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்பு

புதுடெல்லி: இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய குவாட் அமைப்பின் உச்சி மாநாடு, வரும் 24ம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது. இதில், அமெரிக்க அதிபர் பைடன், பிரதமர் மோடி உட்பட 4 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் பிரதமர் மோடி பங்கேற்பது தொடர்பாக அரசு உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘40 மணி நேரம் ஜப்பானில் தங்கிருக்கும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் ஆகியோருடன் பேசு்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் 23 நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். ஒருநாள் இரவு டோக்கியோவிலும், 2 நாள் இரவு விமானத்திலும் அவர் செலவிடுவார்,’ என்று தெரிவித்தனர்.

Related Stories: