ஓராண்டு ஆட்சி நிறைவு கருத்து கணிப்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாட்டில் 85% மக்கள் திருப்தி: எடப்பாடி செயல்பாடு சரியில்லை- 35% பேர் கருத்து

புதுடெல்லி: தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு முடிந்துள்ள நிலையில், அவருடைய செயல்பாடு குறித்து 84.57 சதவீதம் மக்கள் திருப்தி தெரிவித்துள்ளனர். தமிழகம், மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, கேரளா ஆகிய 5 மாநிலங்களில் கடந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக அமோக வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இந்நிலையில், இந்த மாநிலங்களில் ஆட்சி அமைக்கப்பட்டு ஓராண்டு முடிந்துள்ள நிலையில், இம்மாநில முதல்வர்களின் செயல்பாடு, 2024 மக்களவை தேர்தலில் பிரதமராக யாருக்கு ஆதரவு? என்ற கேள்விகளுடன், 120 மக்களவை தொகுதிகளில் ஐஏஎன்எஸ் சார்பில் சி - வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.  இந்த 5 மாநிலங்களிலும் முதல்வர்களின் செயல்பாடுகள்  குறித்து எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில், மற்ற மாநில முதல்வர்களை விட தமிழக முதல்வர் மு..க.ஸ்டாலினுக்கு மக்கள் அமோக ஆதரவு தெரிவித்துள்ளனர். மொத்தமாக 84.57 சதவீத மக்கள் அவருடைய செயல்பாட்டில் திருப்தி தெரிவித்துள்ளனர். அதே நேரம், எதிர்க்கட்சி  தலைவர்களின் செயல்பாடு பற்றிய கருத்து கணிப்பில்,  எடப்பாடி பழனிசாமி மீது 35.28  சதவீத மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 41.71 சதவீதம் பேர் ஓரளவுக்கு  திருப்தி தெரிவித்துள்ளனர்.

பிரதமராக யாருக்கு ஆதரவு?

மாநிலம்    தலைவர்    ஆதரவு

அசாம்    மோடி    43%

    கெஜ்ரிவால்    11.62%

     ராகுல் காந்தி    10.7%

கேரளா    மோடி    28%

    ராகுல் காந்தி    20.38%

    கெஜ்ரிவால்    8.28%

தமிழகம்    மோடி    29.56%

    ராகுல் காந்தி    24.65%  

    மம்தா பானர்ஜி    5.23%

மே.வங்கம்    மோடி    42.37%

    மம்தா பானர்ஜி    26.08%

    ராகுல் காந்தி    14.4%

புதுச்சேரி    மோடி    49.69%

    ராகுல் காந்தி    3.22%

* இந்த 5 மாநிலங்களிலும் பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமான நபராக மோடிக்கு சராசரியாக 49.91 சதவீதம் பேரும், ராகுல் காந்திக்கு 10.1 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Related Stories: