கோத்தகிரி அருகே கோயிலுக்குள் புகுந்து எண்ணெய் குடித்த கரடிகள்: வீடியோ வைரலால் பரபரப்பு

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மிலிதேன் கிராமப் பகுதியில் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இக்கோயில் வளாகத்திற்குள் 3 கரடிகள் இரும்பு கேட்டில் ஏறி குதித்து புகுந்தன. கோயிலில் வைத்திருந்த விளக்கில் இருந்து எண்ணெய்யை குடித்தன. பின்னர் சிறிது நேரம் 3 கரடிகளும் கோயில் முன்பாக படுத்து உருண்டன. இக்காட்சிகள் அங்குள்ள கேமராவில் பதிவாகி உள்ளது. கோயிலுக்குள் கரடிகள் வந்து சென்ற சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: