தமிழகத்துக்கு 267 டிஎம்சி காவிரி நீர் விடுவித்தது கர்நாடகா

சென்னை:  காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி ஜூன் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை தவணைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு படி ஆண்டுக்கு 177 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு கர்நாடகா அரசு தர வேண்டும். இந்த நிலையில் நடப்பாண்டு தவணைகாலத்தில் ஜூன் மாதத்தில் 9.19 டிஎம்சியில் 7.69 டிஎம்சியும், ஜூலை மாதத்தில் 31.24 டிஎம்சியில் 27.98 டிஎம்சியும், ஆகஸ்ட்டில் 45.95 டிஎம்சியில் 22.64 டிஎம்சியும், செப்டம்பர் மாதத்தில் 36.76 டிஎம்சியில் 33.13 டிஎம்சியும், அக்டோபர் மாதத்தில் 20.22 டிஎம்சியில் 48.27 டிஎம்சியும், நவம்பர் மாதத்தில் 13.78 டிஎம்சியில் 71.56 டிஎம்சியும், டிசம்பரில் 7.35 டிஎம்சியில் 26.18 டிஎம்சியும், ஜனவரியில் 2.67 டிஎம்சியில் 6.4 டிஎம்சியும், பிப்ரவரி மாதத்தில் 2.5 டிஎம்சியில் 3.11 டிஎம்சியும், மார்ச் மாதத்தில் 2.5 டிஎம்சியில் 5.2 டிஎம்சியும், ஏப்ரல் மாதத்தில் 2.5 டிஎம்சியில் 5.8 டிஎம்சியும், மே மாதத்தில் 2.5 டிஎம்சியில் மே 18ம் தேதி வரை 1.45 டிஎம்சியில், 5.8 டிஎம்சி என மொத்தம் 176.2 டிஎம்சியில் 267.48 டிஎம்சி தந்துள்ளது. இந்த தவணை காலத்தில் 91.28 டிஎம்சி நீர் கூடுதலாக கர்நாடகா தந்துள்ளது.

Related Stories: