சில்லி பாயின்ட்...

* புரோ லீக் ஹாக்கி தொடரில் எஞ்சிய ஆட்டங்களுக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சவீதா தலைமையிலான அணியில் மொத்தம் 25 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். இந்தியா, ஓமனில் நடைபெற்று வந்த ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், எஞ்சிய ஆட்டங்கள் பெல்ஜியம், நெதர்லாந்தில் ஜூன் 11ம் தேதி தொடங்குகின்றன. புள்ளிப் பட்டியலில் தற்போது இந்தியா முதல் இடத்தில் உள்ளது.

* இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா (16 வயது, சென்னை), உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை (நார்வே) 2வது முறையாக வீழ்த்தி அசத்தியுள்ளார். சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான நார்வே அணியில் கார்ல்சன் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

* தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து 17-21, 16-21 என்ற நேர் செட்களில் சீனாவின் சென் யூ பெய்யிடம் போராடி தோற்றார்.

* ஐபிஎல் டி20 தொடரின் அடுத்த சீசனிலும் விளையாட உள்ளதாக சிஎஸ்கே கேப்டன் தோனி அறிவித்துள்ளார்.

Related Stories: