வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன்: அரியானாவில் பயங்கரம்

குர்கிராம்: அரியானாவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 13 வயது சிறுமியை, அதேபகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரியானா மாநிலம் குர்கிராமை சேர்ந்த 13 வயது சிறுமி அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதேபகுதியைச் சேர்ந்த ​17 வயது சிறுவன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தான். அப்போது அவனது நண்பனான 15 வயது சிறுவன், வீட்டின் அறையை பூட்டிவிட்டு வெளியில் நின்றிருந்தான். பாதிக்கப்பட்ட சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அவரது பெற்றோர் அங்கு சென்றபோது, வெளியே நின்ற சிறுவனும், சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவனும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், குர்கிராம் போலீசார் வழக்குபதிந்து, சிறுவர்கள் இருவரையும் கைது செய்து, பரிதாபாத் மாவட்ட குழந்தைகள் நல சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னதாக, கடந்த சில வாரங்களுக்கு முன் பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரி குளித்துக் கொண்டிருந்த போது, அத்துமீறி குளியலறைக்குள் 17 சிறுவன் நுழைந்துள்ளான். அப்போது அவனை பிடித்து சிறுமியின் பெற்றோர் எச்சரித்து அனுப்பி உள்ளனர். தற்போது மீண்டும் அவர்களது வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்ததில், அவரை பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ெதாடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

Related Stories: